தர்மபுரி மைய நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்ட தொடக்க விழா

Update: 2023-02-02 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி தர்மபுரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஒரு மாதம் நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சி தொடக்க விழா மற்றும் நூலக நண்பர்கள் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி வரவேற்றார். தகடூர் புத்தக பேரவை தலைவர் செந்தில், செயலாளர் சிசுபாலன், நெடுஞ்சாலைத்துறை தனி தாசில்தார் அதியமான், வாசகர் வட்ட தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பழனி, புத்தக பேரவை ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சிவப்பிரகாசம், நூலக ஆய்வாளர் மாதேஸ்வரி, இருப்பு சரிபார்ப்பு அலுவலர் மாதேஸ்வரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் ரங்கராஜன், மேலாளர் சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்