கோவில்களில் பவுர்ணமி வழிபாடு
வேதாரண்யம் பகுதி கோவில்களில் பவுர்ணமி வழிபாடு
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை பகுதியில் வனதுர்க்கை அம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் வேதாரண்யம் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடம், வேம்ப தேவன்காடு தெற்கு பகுதியில் உள்ள மவுன சித்தர் பீடம் மற்றும் பல்வேறு கோவில்களில் பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்ததது.