கோவில்களில் பவுர்ணமி வழிபாடு
கோவில்களில் பவுர்ணமி வழிபாடு நடத்தப்பட்டது.
ஆடி மாத பவுர்ணமியையொட்டி தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக காசி விசாலாட்சி மற்றும் காசி விஸ்வநாதருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதனை தொடர்ந்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யவும் மக்கள் நோய் நொடியின்றி வாழ்ந்திடவும் கூட்டு பிரார்த்தனை நடத்தினர். பின்னர் ரிஷப வாகனத்தில் காசி விஸ்வநாதர், அம்பிகை காசி விசாலாட்சியுடன் எழுந்தருளி கோவில் பிரகாரம் சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு அருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதேபோல் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்புவழிபாடு நடந்தது. தொட்டியம் பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில் தொட்டியம் மற்றும் சுற்றுவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தொட்டியம் சந்தைப்பேட்டை எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.