ஒளிலாயத்தில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

சீர்காழி அருகே ஒளிலாயத்தில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது

Update: 2023-06-04 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சித்தர்புரம் ஒளிலாயத்தில் அனைத்து சித்தர்களுக்கென்று தனி சன்னதி உள்ளது. இங்கு பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று சித்தர்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒடிசாவில் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆன்மா சாந்தியடைய வேண்டியும், காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டி பவுர்ணமி திதியில் மகா யாகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்