முப்பெரும் தேவியர் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை
புளியங்குடி முப்பெரும் தேவியர் ஆலயத்தில் பவுர்ணமி பூஜைகள் நடைபெற்றது.
வாசுதேவநல்லூர்:
புளியங்குடியில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத பவுர்ணமி பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 1008 பாலாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார். அதனை தொடர்ந்து முப்பெரும் தேவியர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்று காளி, நாகக்காளி சூலக்காளி, ரத்தக் காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளி அம்மன், பேச்சியம்மனுக்கு பால் அபிஷேகமும் நடந்தது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.