காலில் ஏற்பட்ட காயத்தால் விரக்தி: கபடி வீரர் தற்கொலை
காலில் ஏற்பட்ட காயத்தால் விரக்தி அடைந்த கபடி வீரர் தற்கொலை செய்து கொண்டார்.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விடத்தகுளம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 25). கபடி வீரர். இவர் கபடி போட்டியின் போது காலில் காயம் அடைந்தார். உள் காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து ஒரு வருடமாக காலில் வலி இருந்தது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தியில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.