தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு புதிய ரெயில் இயக்க கோரிக்கை

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே புதிய ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி இந்திய வர்த்தக தொழிற்சங்க செயலாளர் டி.ஆர். கோடீசுவரன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2023-06-06 18:45 GMT

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே புதிய ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி இந்திய வர்த்தக தொழிற்சங்க செயலாளர் டி.ஆர். கோடீசுவரன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

மேட்டுப்பாளையம்

இதுகுறித்து அவர் புதுடெல்லி ரெயில்வே வாரிய தலைவர் அனில்குமார் லகோதிக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில், "தூத்துக்குடி ஒரு தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இந்த தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே புதிய ரெயில் சேவை தொடங்க வேண்டும். மும்பை-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரெயிலை வாராந்திர ரெயிலாக தொடர்ந்து இயக்க வேண்டும். பாலக்காடு-நெல்லை இடையே இயக்கப்பட்டு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும், திருச்சி-தூத்துக்குடி இடையே பகல்நேர இன்டர்சிட்டி ரெயில் இயக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள்

தூத்துக்குடியில் இருந்து போடிநாயக்கனூருக்கு ரெயில் இயக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து மும்பை, ஐதராபாத், எர்ணாகுளத்துக்கு புதிய ரெயில் இயக்க வேண்டும். முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு காலை 7.30 மணிக்கு சென்றடைகிறது. இதனை 7 மணிக்கு சென்றடையும் வகையில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும், தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையம் செல்லும் சாலையை அகலப்படுத்தி போக்குவரத்து நெருக்கடியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் நிலையத்தை மாடல் ரெயில் நிலையமாக அறிவித்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்'் என்று கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்