கண்களில் கருப்புத்துணியை கட்டி ஆர்ப்பாட்டம்

கண்களில் கருப்புத்துணியை கட்டி ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-01 18:45 GMT

கோவை

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கண்களில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கண்களில் கருப்புத்துணி

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு திரளான பெண்கள் கூடினார்கள். கண்களில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்குவதுபோல், சிறப்பு ஓய்வூதியம், அகவிலைப்படியுடன் ரூ.6,750-ஐ வழங்க வேண்டும், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களில் 50 சதவீத ஒதுக்கீடு செய்து தகுதி உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் வழங்கிட வேண்டும், காலை உணவு திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிர்வாகிகள்

இந்த ஆர்ப்பாட்டத்துக்குமாவட்ட தலைவர் வீரபத்திரன் தலைமை தாங்கினாார். மாவட்ட துணைத்தலைவர் தமிழரசி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வெங்கிட சுப்பிரமணியம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சாந்தா, இன்னாசிமுத்து, ஆனந்தவள்ளி, மனோரஞ்சிதம் உள்பட நிர்வாகிகள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்