ராமேசுவரம் முதல் சென்னை வரை ரத்ததானத்தை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர் பிரசாரம்

ராமேசுவரம் முதல் சென்னை வரை ரத்ததானத்தை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர் பிரசாரம் செய்தாா்.

Update: 2023-09-09 22:50 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெ.எஸ்.சாகுல் அமீது. சமூக ஆர்வலர். ரத்த தானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், ரத்ததானம் செய்வதை கடமையாகவும் கொண்டு உள்ளார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து ரத்ததான விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார். ராமேசுவரத்தில் இருந்து சென்னை வரை நடைபெறும் இந்த பயணதிட்டத்தில் அவர் தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களை தொடர்ந்து நேற்று ஈரோடு வந்தார். ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவர் இங்குள்ள ரத்த வங்கியில் நடைபெற்ற ரத்ததான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவரது ஆட்டோவிலேயே நகரின் பல்வேறு பகுதிகளிலும் ரத்ததான விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். அவருக்கு ஈரோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், பல்வேறு அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்கள், போலீசாருக்கு மரக்கன்றுகள் வழங்கி பிரசாரம் செய்தார்.

இவர் வருகிற செப்டம்பர் 21-ந் தேதி சென்னை கடற்கரையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்