நாகூரில் இருந்து கொல்லத்திற்கு மீண்டும் ரெயில் இயக்க வேண்டும்

நாகூரில் இருந்து கொல்லத்திற்கு மீண்டும் ரெயில் இயக்க வேண்டும்

Update: 2023-06-12 18:45 GMT

நாகூரில் இருந்து கொல்லத்திற்கு மீண்டும் ரெயில் இயக்க வேண்டும் என்று நாகூர்-நாகை ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தியது.

கோரிக்கை மனு

நாகூர்- நாகப்பட்டினம் ெரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் மோகன், செயலாளர் சித்திக் ஆகியோர் தென்னக ெரயில்வே திருச்சி கோட்டத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 25 ஆண்டுகாலமாக நாகூர்- கொல்லம் இடையே 2 மார்க்கத்திலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக ரெயில் இயக்கப்பட்டது. இந்தநிலையில் அகல பாதையாக மாற்றும் பணிக்காக நாகூர்- கொல்லம் இடையிலான ெரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ெரயில் சேவை இதுவரை தொடங்கவில்லை.

மீ்ண்டும் தொடங்க வேண்டும்

காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர் ஆகியவை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. எனவே நாகூரில் இருந்து கொல்லத்திற்கு மீண்டும் ரெயில்சேவையை தொடங்க வேண்டும். மதுரை - புனலூர் தினசரி இரவு நேர விரைவு ெரயிலை காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். மதுரை- விழுப்புரம் இன்டர்சிட்டி விரைவு ெரயில் தினந்தோறும் காலை 4 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 6.33 மணிக்கு வர வேண்டும். ஆனால் காலை 6.45 மணிக்கு தான் திருச்சி சந்திப்புக்கு வருகிறது.

டெமு ரெயிலை தினமும் இயக்க வேண்டும்

இந்த ெரயிலில் மதுரையில் இருந்து திருவாருர், நாகப்பட்டினம், நீடாமங்கலம், கீழ்வேளூர், நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால், திருநள்ளாறு ஆகிய இடங்களுக்கு அதிக அளவில் பயணிகள் வருகிறார்கள். ஆனால் திருச்சியில் இருந்து காரைக்கால் புறப்படும் டெமு ெரயில் காலை 6.40 மணிக்கு புறப்படுகிறது. விழுப்புரம்-மதுரை இன்டர் சிட்டி ெரயில் பயணிகள் நலன் கருதி திருச்சியில் இருந்து காரைக்கால் டெமு ெரயிலை 6.55 மணிக்கு மேல் தினசரி இயக்க வேண்டும்.

இதனால் தென்மாவட்ட பயணிகள் அதிகம் பயனடைவார்கள். அதே நேரத்தில் விழுப்புரம்- மதுரை இன்டர் சிட்டி ெரயில் மற்றும் திருச்சி- காரைக்கால் டெமு ெரயிலை அடுத்தடுத்த நடைமேடைகளில் இருந்து இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்