கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனா்

Update: 2023-06-19 21:25 GMT

புஞ்சைபுளியம்பட்டி டானாபுதூர் போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் ரபீ தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது வேனுக்குள் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வேனை ஓட்டி வந்தவர் மற்றும் அவருடன் வந்திருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலத்தை சேர்ந்த சஞ்சய்ராஜ் (வயது 30), தாளவாடியை சேர்ந்த பயஸ் பாஷா (30), கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த மூபிஸ் (20) ஆகியோர் என்பதும் 3 பேரும் சேர்ந்து சாம்ராஜ் நகரில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்களை வேனில் கடத்தியதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும், ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 412 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முசாயிதீன் என்பவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்