சின்னசேலத்தில் இருந்து 114 வைக்கோல் கட்டு சுற்றும் எந்திரம் கர்நாடகாவிற்கு அனுப்பி வைப்பு

சின்னசேலத்தில் இருந்து 114 வைக்கோல் கட்டு சுற்றும் எந்திரம் கர்நாடகாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-10-12 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட நெல் அறுவடை எந்திரங்கள், வைக்கோல் கட்டு சுற்றும் எந்திரங்கள் உள்ளன. இந்த எந்திரங்களை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு நெல் அறுவடை செய்யும் பணிக்கு ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் அதன் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் கடந்த சில ஆண்டுகளாக ரெயில்வே துறை மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு சின்னசேலம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல் அறுவடை எந்திரம் ஏற்றி செல்லும் பணி நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று வைக்கோல் கட்டு சுற்றும் எந்திரமான டிராக்டர் பேலர் சின்னசேலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சூரத்கல் பகுதிக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இதில் 114 வைக்கோல் கட்டு சுற்றும் எந்திரங்கள் சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியை ரெயில்வே மேலாளர் கிரி பாலாஜி, முதன்மை வணிக ஆய்வாளர் மாதுராஜா, வணிக அலுவலர் பர்கான், முதன்மை வணிக எழுத்தர் தர்மதேவ், ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்