ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்து போனார்.

மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு

Update: 2022-07-12 14:41 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நவநாயகம். இவரது மனைவி ரத்னா தேவி (வயது 62). சம்பவத்தன்று நவநாயகம் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் புதியம்புத்தூரில் காய்கறி வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது இந்திராநகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரத்தினதேவி திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு ரத்னா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்