மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அக்குபஞ்சர் டாக்டர் சாவு

தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அக்குபஞ்சர் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-10 18:45 GMT

திருச்சி மாவட்டம் எடமலைபட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 33). அக்குபஞ்சர் டாக்டர். இவர், ஆண்டிப்பட்டியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அருண்குமார், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து மோட்டார்சைக்கிளில் ஆண்டிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். தேவதானப்பட்டி- ஆண்டிப்பட்டி சாலையில் சில்வார்பட்டி ஒத்த வீடு அருகே மோட்டார்சைக்கிள் சென்றது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் தாறுமாறாக ஓடியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து அருண்குமார் தவறி கீேழ விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்