மதுரையில் பிரபல ரவுடி கொலையில் நண்பர் கைது - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

மதுரையில் பிரபல ரவுடி கொலையில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-02-23 21:29 GMT


மதுரையில் பிரபல ரவுடி கொலையில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரவுடி கொலை

மதுரை மாட்டுத்தாவணி அடுத்த உலகனேரி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற டோரா பாலா (வயது 30). ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவத்தன்று இரவு மதுரை உத்தங்குடி வளர்நகர், ராஜீவ் காந்தி நகரில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் பாலமுருகன் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள் பாலமுருகனை வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

நண்பர் கைது

விசாரணையில், பாலமுருகனின் நண்பர்களான வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் ஆகியோர் ராஜீவ்காந்தி நகரில் மது அருந்தி உள்ளனர். அப்போது, பாலமுருகன், நண்பர் ஒருவரின் தாயாரை இழிவாக பேசி உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரம் அடைந்த மற்ற 5 பேரும் சேர்ந்து பீர்பாட்டிலால் பாலமுருகனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மற்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்