தொழிலாளியை கத்தியால் குத்திய நண்பர் கைது

தொழிலாளியை கத்தியால் குத்திய நண்பர் கைது

Update: 2022-11-30 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன்(வயது 27). இவரது நண்பர் வசியாபுரத்தை சேர்ந்த அப்துல்லா குட்டி(36). தொழிலாளிகளான 2 பேரும், ஓரிடத்தில் அமர்ந்து மது அருந்தும்போது, அப்துல்லா குட்டி தனது செல்போனை மறந்து விட்டு சென்றதாக தெரிகிறது. அதை எடுத்து வைத்திருந்த லோகேஸ்வரன், சில நாட்கள் கழித்து அந்த செல்போனை அப்துல்லா குட்டியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது முற்றவே அப்துல்லா குட்டி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லோகேஸ்வரனை குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து அப்துல்லா குட்டியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்