உடன்குடி பகுதியில் அடிக்கடி மின்தடை: இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்த முடிவு

உடன்குடி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை கண்டித்து இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

Update: 2023-07-25 18:45 GMT

உடன்குடி:

இந்துமக்கள்கட்சி அனுமன்சேனாவின் உடன்குடி ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் வைத்தியலிங்கபுரம் இசக்கிஅம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. நகரதலைவர் அந்தோணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இசக்கிமுத்து. மாவட்ட செயலாளர்லிங்கவேல் ஆதித்தன், மாவட்ட தலைவர் தங்கராஜா, ஆலயபாதுகாப்புக்குழு மாநிலசெயலாளர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஒன்றிய துணைத் தலைவர் சக்தி குமார், உடன்குடி ஒன்றிய துணைத்தலைவர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும், அனைத்து இந்து மாணவ, மாணவியருக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். உடன்குடி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் தடையை கண்டித்து நாளை (வியாழக்கிழமை) மின்சார வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

Tags:    

மேலும் செய்திகள்