பிரேக் பிடிக்காததால் மேடான பகுதியில் மோதி நின்ற சரக்கு வேன்
திம்பம் மலைப்பாதையில் பிரேக் பிடிக்காததால் மேடான பகுதியில் சரக்கு வேன் மோதி நின்றது.
சத்தியமங்கலம்:
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. நேற்று மாலை 5 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையின் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது திடீரென சரக்கு வேனின் பிரேக் இயங்கவில்லை.
பிரேக் பிடிக்காததால் சரக்கு வேன் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியின் மேடான இடத்தில் ஏறி மோதி நின்றது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்தில் சரக்கு வேனின் முன்புறமும், பின்புறமும் சேதம் அடைந்தது. இதுபற்றி சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.