சுடுமண் உறைகிணற்றின் 2 அடுக்குகள் வெளியே தெரிந்தன
கீழடி அகழாய்வின்போது சுடுமண் உறைகிணற்றின் 2 அடுக்குகள் வெளியே தெரிந்தன.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.. இப்பணிகள் கீழடி மட்டுமின்றி அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெறுகிறது. இதில் கீழடியில் 8-வது குழி தோண்டப்பட்டதில் சுவர் போன்ற செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது 9-வது குழி தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 8-வது குழியில் செங்கல் சுவர் கண்டறியப்பட்ட இடத்தின் அருகே ஆழமாக தோண்டியதில் சுடுமண் உறைகிணறு தென்பட்டது.
மிகவும் நேர்த்தியாகவும், வட்டவடிவமாகவும் அந்த உறைகிணறு இருந்தது. ஆனால், அந்த உறைகிணறு எவ்வளவு உயரம் கொண்டது? அதன் அடிப்பகுதி எவ்வாறு இருக்கும்? என்பதை அறிய ஆழமாக தோண்டினார்கள். தற்போது அந்த உறை கிணறின் 2 அடுக்குகள் வெளியே வந்துள்ளன. மேற்கொண்டு இன்னும் ஆழமாக தோண்டினால் அந்த உறைகிணற்றின் அடு்த்தடுத்த அடுக்குகளை காண முடியும் என தொல்லியல் அதிகாரிகள், அலுவலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.