விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2022-08-10 15:15 GMT

திருச்செந்தூர்:

சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக திருச்செந்தூர்- சாத்தான்குளம் வழித்தடத்தில் இலவச பஸ் பாஸ் வசதியுடன் டவுண் பஸ் இயக்கக் கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்செந்தூரில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி திருச்செந்தூர்- சாத்தான்குளம் வழித்தடத்தில் இந்த மாதம் இறுதிக்குள் டவுண் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்