இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா
கழுகுமலையில் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா நடந்தது.
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலை ஸ்ரீ முருகன் கூட்டுறவு பண்டகசாலைக்கு உட்பட்ட 1, 2, 3 ஆகிய ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா நடைபெற்றது.
பண்டகசாலை தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கி, இலவச வேட்டி-சேலைகளை வழங்கினார். கூட்டுறவு செயலாளர் கன்னிச்சாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர் செல்வக்குமார், கள அலுவலர் அக்னிமுத்துராஜ் மற்றும் பண்டகசாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.