வளர்ப்பு நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்
கமுதியில் வளர்ப்பு நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் நடந்தது.
கமுதி,
கமுதி பகுதியில் சமீபகாலமாக வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் நோய் தாக்குதலில் இருந்து விடுபடவும், வளர்ப்போருக்கு நோய்தொற்று தாக்காமல் இருப்பதற்காகவும் கால்நடை துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு, இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான கோல்டன், ரெட்ரீவர், கன்னி, சிப்பிபாறை, அல்சேசன் போன்ற 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும் செல்லப்பிராணிகளை வாரம் ஒரு முறை குளிக்க வைக்க வேண்டும். சத்தான உணவுகள் அளிக்க வேண்டும், மூன்று மாதம் கழித்து அடுத்த கட்ட வெறிநோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்தினர்.முகாமில் கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி, பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, வார்டு உறுப்பினர்கள், டாக்டா் சிவக்குமார் உதவி இயக்குனர் (பரமக்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.