ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடை

நாங்குநேரி அருகே ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.

Update: 2022-12-01 19:25 GMT

இட்டமொழி:

நாங்குநேரி தொகுதி சங்கனாங்குளம் புனித சவேரியார் ஆலய 8-ம் ஆண்டு திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச சீருடையையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், கட்சி நிர்வாகிகள் பழனிவேல் பாண்டியன், மாயகிருஷ்ணன், ஆறுமுகம், மந்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தலைமை தாங்கினார். இதில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, நகர செயலாளர் முருகையா, பஞ்சாயத்து தலைவர்கள் சுப்புலட்சுமி வசந்தகுமார் (அரியகுளம்), சுதா வேல்குமார் (கூந்தன்குளம்) உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்