நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-05-15 18:54 GMT


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போட்டித்தேர்வு

தமிழக இளைஞர்கள் மத்திய அரசின் போட்டித்தேர்வுகளில் எளிதாக அணுகுவதற்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக ெரயில்வே எஸ்.எஸ்.சி. மற்றும் வங்கி தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி மாவட்டந்தோறும் அளிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் தலா 150 மாணவர்கள் வீதம் நேரடி வகுப்பு பயிற்சி சிறந்த வல்லுனர்களை கொண்டு வழங்கப்படும். 300 மணி நேரம் தனி வழிகாட்டல், 200-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.

2 இடங்கள்

பயிற்சிக்காலம் 100 நாட்கள் ஆகும். மாவட்டந்தோறும் நடைபெற உள்ள இந்த பயிற்சிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள இதற்கான இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மாவட்டத்தில் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட நூலக அலுவலகத்திலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிவகாசி ஆகிய 2 இடங்களிலும் நடைபெறும். மேலும் தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

கூடுதல் விவரம்

கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழில் பயிற்சி நிலைய வளாகம், சூலக்கரை, விருதுநகர் என்ற முகவரியில் நேரடியாக அணுகலாம்.

அதேபோல 04562 294755 என்ற எண்ணிலோ அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்