தொழில்முனைவோருக்கான இலவச திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

தொழில்முனைவோருக்கான இலவச திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

Update: 2022-07-01 14:58 GMT

நாகை கீச்சாங்குப்பத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மெட்ரோ மீன்பதன தொழில்நுட்ப கூடத்தில் தொழில் முனைவோருக்கான இலவச திறன்வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில் மீன்களை சுகாதாரமாக கையாளும் முறைகள், கடல் உணவுகளை பயன்படுத்தி கேக், பிஸ்கட், சாக்லேட், பாஸ்தா, நூடுல்ஸ், குர்குரே, மசாலா கருவாடு, இட்லி பொடி, ஊறுகாய், உடனடியாக பரிமாறக்கூடிய குழம்பு வகைகள் போன்ற மதிப்பூட்டிய மீன் பொருட்களை உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் பேக்கிங் செய்யும் முறைகள் குறித்து மீன்பதன பொறியியல் துறையின் பேராசிரியர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தஞ்சை, கும்பகோணம், சீர்காழி, நாகூர் மற்றும் நாகையை சேர்ந்த 50 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மீன்வள பொறியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மணிமேகலை, சான்றிதழ்கள் மற்றும் பயிற்சி கையேடுகளை வழங்கினார். இதில் உதவி பேராசிரியர் கார்த்திக்குமார், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்