ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்

ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் பெற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-08-02 19:04 GMT


ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் பெற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தையல் எந்திரம்

சமூக நல அலுவலகத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழை பெண்கள் தையல் எந்திரம் பெற தகுதி வாய்ந்த பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான நபர்கள் விண்ணப்பத்துடன் தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட வருமானச்சான்று, பிறப்பிடம், இருப்பிட சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட பயிற்சி சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

ஆவணங்கள்

குறைந்தபட்சம் 6 மாதம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 20 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான வயது சான்று இணைக்க வேண்டும்.

சாதி சான்று, விண்ணப்பதாரரின் வண்ண பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, ஆதார் அட்டை மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்