மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு இலவச தையல் எந்திரம் ; கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு இலவச தையல் எந்திரங்களை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
நாகா்கோவில்,
மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு இலவச தையல் எந்திரங்களை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.
இலவச தையல் எந்திரம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மோட்டார் பொருத்திய இலவச தையல் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 800 மதிப்புள்ள இலவச தையல் எந்திரங்களை 20 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். அதேபோன்று ஒருவருக்கு ரூ.7,900 மதிப்புள்ள சக்கர நற்காலியும் வழங்கப்பட்டது.
ரூ.3 ஆயிரம் பரிசு
அதனை தொடர்ந்து தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 2021-22-ம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டிற்கு சிற்ப வரைவுகள் மற்றும் குறிப்புகள் தயார் செய்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக முதுநிலை ஆய்வாளர் ஆஷிகாவுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு தொகையை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை கலெக்டர் திருப்பதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.