திருப்பத்தூரில் குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு

திருப்பத்தூரில் குரூப்-4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

Update: 2022-07-11 19:07 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் குரூப்-4 தேர்வுக்கான மாதிரி தேர்வலு நடைபெற உள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தன்னார்வலர்கள் பயிலும் வட்டம் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான இலவசப்பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. வருகிற 16-ந் தேதி முதல் ஆதியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்த எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண் மற்றும் கியூர் ஆர் கோடு பதிவு செய்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பதிவு செய்த மனுதாரர்கள் மாதிரி தேர்விற்கு காலை 9 மணிக்கு முன்னர் தேர்வு நடைபெறும் மையத்திற்கு வர வேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை. இது தொடர்பான விவரங்களுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்யும் மனுதாரர்களுக்கு தேர்விற்கான கேள்வித்தாள் மற்றும் கியூ.எம்.ஆர். சீட் தேர்வு நடைபெறும் வளாகத்தில் இலவசமாக வழங்கப்படும். எனவே விண்ணப்பித்த மனுதாரர்கள் அனைவரும் இத்தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்