முடி திருத்தும் தொழிலாளர்களுக்குஇலவச தொகுப்பு வீடு வழங்க வேண்டும்நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை

Update: 2023-08-26 20:04 GMT

சேலம்

சேலம் மண்டல முடி திருத்தும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது. மண்டல தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மண்டல துணை தலைவர் அதிரூபன், துணை செயலாளர் முனிரத்தினம், மண்டல செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், வெங்கடாஜலம், இளைஞரணி அமைப்பாளர்கள் ரவி, ரமேஷ் உள்பட மாவட்ட, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் இலவச தொகுப்பு வீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலவச அழகுக்கலை பயிற்சி நடத்துவது, சமுதாய மக்கள் அனைவரையும் நலவாரியத்தில் இணைத்து அரசு உதவிகள் பெற்று தருவது, குறைந்த கட்டணங்களில் தொழில் புரியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சரியான கட்டணத்தில் தொழில்புரிய வேண்டும் என வலியுறுத்த வேண்டும், குறைந்த கட்டண விவரங்கள் அடங்கிய விளம்பர பலகைகளை வைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்