நீர்பழனியில் நாளை இலவச கண் மருத்துவ முகாம்
நீர்பழனியில் நாளை இலவச கண் மருத்துவ முகாம் நடக்கிறது.
விராலிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவை சார்பில் விராலிமலை ஒன்றியம் நீர்பழனியில் நாளை (புதன்கிழமை) இலவச கண் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. நீர்பழனி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கண்புரை நோயால் கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இலவசமாக கண்ணில் விழி லென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை கிடைக்க இலவச அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். முகாமில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் கண் சம்பந்தமான இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படும். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை, உள் வெளி லென்ஸ், உணவு தங்குமிடம், போக்குவரத்து செலவு அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு முகாம் ஒருங்கிணைப்பாளர் சந்தனகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.