இயற்கை விவசாய குழுக்களுக்கு இலவச அங்கக சான்று

இயற்கை விவசாய குழுக்களுக்கு இலவச அங்கக சான்று வழங்கப்பட உள்ளதாக விருதுநகர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-08 20:21 GMT


இயற்கை விவசாய குழுக்களுக்கு இலவச அங்கக சான்று வழங்கப்பட உள்ளதாக விருதுநகர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ் தெரிவித்துள்ளார்.

இலவச சான்று

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாய குழுக்களுக்கு தமிழ்நாடு அரசின் விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை மூலமாக பங்கேற்பு உத்தரவாத அமைப்பின் கீழ் இலவசமாக அங்கக சான்று அளிக்கப்படுகிறது. இந்த அங்கக சான்றளிப்பு இயற்கை வேளாண்மைக்கான தேசிய மையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மூன்றாம் தரப்பு உத்தரவாதம் அல்லாமல் அளிக்கப்படும் ஒரு அங்கக சான்று ஆகும். இதில் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு துறை மண்டல கவுன்சிலாக செயல்படும்.

நடைமுறைகள்

இயற்கை விவசாயம் செய்யும் போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 முதல் 50 வரை இருக்கலாம். அவர்கள் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் அல்லது அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.

இந்த முறையில் சான்றிதழ் சக குழு உறுப்பினர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் சான்றளிப்பு வழங்கப்படும். மேலும் அவர்கள் முழுமையாக மண்டல கவுன்சிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குழுவின் கூட்டங்களிலும், பயிற்சியிலும் கலந்து கொள்ள வேண்டும். குழுவினரே தங்களுடைய செயல்முறைகளை, நடைமுறைகளை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

சக குழு உறுப்பினர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் மண்டல கவுன்சில் ஆக இருக்கும் தமிழ்நாடு அரசு விதை சான்று மற்றும் சான்றளிப்பு துறை வாய்ப்பு சான்றிதழ் அளிக்கும் உள்ளூர் குழு நிலை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்