அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பாக நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான நுரையீரல் சம்பந்தமான நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சிறப்பு முகாமை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி வழிகாட்டுதலின்படி, நகர் மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், நகர் நல அலுவலர் ராஜநந்தினி முன்னிலை வகித்தனர். முகாமில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு நுரையீரல் புற்றுநோய், காச நோய் உள்ளிட்ட நோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரத்தப்பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.