அரக்கோணத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
அரக்கோணத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
அரக்கோணம்
அரக்கோணத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
அரக்கோணம் ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை எம்.ஜி.எம்.ஹெல்த் கேர் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ ஆலோசனை முகாம் அரக்கோணம் சி.எஸ்.ஐ. சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளார்களாக அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பிரபு மற்றும் ரோட்டரி சங்கத்தின் 2023-24-ம் ஆண்டுக்கான மாவட்ட ஆளுனர் பரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
முகாமில் இதயம், எலும்பியல், கல்லீரல், சர்க்கரை, காது, மூக்கு, தொண்டை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ ஆலோசனைகளும் மேலும், எகோ டெஸ்ட், எகோ ஸ்கிரினிங், கல்லீரல் சம்மந்தமான பிப்ரோ ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளும் எம்.ஜி.எம். சிறப்பு மருத்துவ குழுவினரால் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் 450-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சதிஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க ஆலோசகர்கள் ஜி.மணி, பி.சந்துரு, மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் இளங்கோ, கே.பி.கே.பிரபாகரன், முன்னாள் ரோட்டரி துணை ஆளுனர்கள் டி.எஸ்.ரவிகுமார், எஸ்.செந்தில்குமார், ஜெ.மணிகண்டன், முருகன் பார்மசி வெங்கடரமணன், பி.ரவிகுமார், கிராமநிர்வாக அலுவலர் வெங்கடேசன், பி.ஆர்.முரளி, மகேஷ் குமார், கமல் ஸ்டுடியோ வெங்கட், மற்றும் எம்.ஜி.எம். ஹெல்த் கேர் சி.இ.ஓ. சிவா தலைமையிலான டாக்டர்கள் உள்பட ரோட்டரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் ஆர்.பி.ராஜா நன்றி கூறினார்.