இலவச மருத்துவ முகாம்
கொரட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
காரைக்குடி,
கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கொரட்டி கிராமத்தில்நடைபெற்றது. தூய்மை இந்தியாவிற்கான துடிப்பான இளைஞர்கள் என்பதை மைய கருத்தாக கொண்டு மாணவ-மாணவிகள் களப்பணியாற்றினர். முகாமை கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகம் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் சுற்றுப்பகுதி, பிள்ளையார் கோவில் குடிநீர் ஊருணி ஆகியவற்றை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்தனர். காரைக்குடி ரோட்டரி கிளப்பின் ஆதரவுடன் மானகிரி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. தொழில் முனைவோருக்கான ஒருநாள் இலவச பயிற்சி முகாம் கிராம பெண்களுக்கு வழங்கப்பட்டது. காரைக்குடி அரிமா சங்க ஆதரவுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் லெட்சுமணன் செய்திருந்தார்.