இலவச மருத்துவ முகாம்

பள்ளூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-04 17:00 GMT

நெமிலியை அடுத்த பள்ளூர் ஊராட்சி மன்றம், சவீதா மருத்துவ கல்லூரி ஆகியவை சார்பில் பள்ளூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பெ.வடிவேலு கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றியக் குழு துணைத் தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். முகாமில், பொது நல மருத்துவம், கண், எலும்பு, பல், தோல், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலம், பெண்கள் நலம், ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்