இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

Update: 2022-12-30 18:45 GMT

குன்னூர்

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட அக்னிபாத் திட்டத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதில் சேர இளைஞர்களை ஊக்குவிக்கவும், சிவில் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்தவும் ராணுவத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில் மருத்துவ முகாம் நடத்துதல், விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தல் போன்றவையும் அடங்கும்.

அதன்படி குன்னூர் அருகே வண்டிசோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலடாமட்டம் பகுதியில் முதல் முறையாக எம்.ஆர்.சி. ராணுவ முகாம் மூலம் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் ராணுவ ஆஸ்பத்திரி டாக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கண் பாதிப்பு, சர்க்கரை, ரத்த அழுத்த பிரச்சினை குறித்து பரிசோதனை மேற்கொண்டு, மருந்து-மாத்திரைகள் வழங்கினர். மேலும் பெண் டாக்டர் மூலம் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தவிர இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை லெப்டினென்ட் கர்னல் ராஜீவ் சர்மா வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்