வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் அமைந்துள்ள பாண்டியன் பல் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை வேதாரண்யம் நகர் மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். தி.மு.க. மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு, ரோட்டரி சங்க செயலாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பல் சம்பந்தமான வேர் சிகிச்சைகள், பல் அடைத்தல், பல் எடுத்தல், பல் சுத்தம் செய்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் சம்பந்தமாக இலவச ஆலோசனைகளை பல் டாக்டர் விக்னேஷ் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் பல் டாக்டர் நவீன்குமார் கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார். முகாமில் பாலாஜி மெடிக்கல் சோமஸ்கந்தன், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் வீரபாண்டியன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.