இலவச மருத்துவ முகாம்

சூரை கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-12-13 17:22 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த சூரை கிராமத்தில் ராணிப்பேட்டை எஸ்.எம்.எச். மருதத்துவமனை சார்பில் இலவச மருத்துவம் முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பெருமாள் தலைமை தாங்கி, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில், 250 பேருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்பாண்டியன், ஊராட்சி வார்டு உறுப்பினர் வடிவேல் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்