இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. செண்பகராமநல்லூர் பஞ்சாயத்து தலைவர் முருகம்மாள் சிவன்பாண்டி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா முன்னிலை வகித்தார்.
அரசு சித்த மருத்துவர்கள் வரதராஜன், சசிமலர், செந்தில் ஆகியோர் பொதுமக்களுக்கு சித்த மருத்துவ ஆலோசனை வழங்கினர். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.