தூத்துக்குடியில்2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
தூத்துக்குடியில்2 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் கீதாஜீவன் நடத்தி வைத்தார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணங்கள் நேற்று நடந்தது. அதன்படி தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். மணமக்களுக்கு குத்துவிளக்கு உள்ளிட்ட ரூ.72 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்கரராமேசுவர் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.