இலவச சட்ட உதவி பயிற்சி முகாம்
சிவகிரியில் இலவச சட்ட உதவி பயிற்சி முகாம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரியில் பாதிக்கப்பட்டோர் கழகம், வரி செலுத்துவோர் நல உரிமை, சமூக பாதுகாப்பு சங்கம், புளியங்குடி மற்றும் மாற்றத்தை நோக்கி குழு சங்கங்கள் இணைந்து இலவச சட்ட பயிற்சி முகாம் நடத்தியது. சிவகிரி மு.வீ.தே.தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பாதிக்கப்பட்டோர் கழக மாநில தலைவர் கணேசன், மு.வீ.தே.தொடக்கப்பள்ளி செயலாளர் பாலு, வரி செலுத்துவோர் நல உரிமை சங்க தலைவர் அருணாசலம் ஆகியோர் தலைமை தாங்கினார். மருதுபாண்டியன், குட்டி ராசு, தீபக் ராஜப்பா, சதீஷ் குமார், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவது எப்படி? அரசு வழங்கும் இலவச சேவைகளை லஞ்சம் இல்லாமல் பெறுவது எப்படி? காவல் நிலையத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வைப்பது எப்படி? என்பது குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.