வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்
வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.
வாணியம்பாடி பஸ் நிலையத்தில் டவுன் போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது சாலை விதிகளை மதித்து உயிர்களை காப்போம். அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டவேண்டும். அப்போது தான் விபத்து ஏற்படும் போது உயிரை காப்பாற்ற முடியும் என்றார்.
பின்னர் சாலையில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்த நபர்களை பாராட்டி டிபன் பாக்ஸ் மற்றும் ரோஜா பூ, சாக்லேட் வழங்கினார். ஹெல்மெட் அணியாமல் வந்த 100 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.