100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்

சாத்தூரில் 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2022-07-09 17:49 GMT

சாத்தூர்,

சாத்தூரில் 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

100 பயனாளிகள்

ஊரக ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை மூலம் 100 சதவீத மானியத்தில் செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி சாத்தூர் தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார்.

சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார். விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 100 பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார்.

விலையில்லா ஆடுகள்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சிகளில் தலா ஒவ்வொரு ஊராட்சிக்கும் 100 பயனாளர்களுக்கு 5 ஆடுகள் வீதம் வழங்க பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று சாத்தூர் ஒன்றியத்தில் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு பயனாளிக்கு ஆடு ஒன்றுக்கு ரூ.3500 வீதம் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் தலா ரூ.17,500- என்ற விகிதத்தில் மொத்தம் 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஆரம்ப கட்ட செலவீனமாக பயனாளிகளுக்கு ஆடு ஒன்றுக்கு ரூ.200, வீதம் 5 ஆடுகளுக்கு மொத்த தொகை ரூ.1000-ம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. மேலும் 5 ஆடுகளுக்கு காது வில்லைகள் பொருத்தப்பட்டு, அரசு செலவில் இரண்டு ஆண்டுகளுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.540.75 வீதம் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறது. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு இத்திட்டத்திற்காக 100 பயனாளிகளுக்கு ஒட்டுமொத்த செலவினமாக தலா 19 லட்சத்து 4 ஆயிரத்து 75 ரூபாய் தமிழக அரசு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, சாத்தூர் நகரமன்ற சேர்மன் குருசாமி, ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், நகர்மன்ற துணை சேர்மன் அசோக், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன், துணை இயக்குனர் கோவில்ராஜா, சாத்தூர் தாசில்தார் வெங்கடேஷ், கால்நடை மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்