1,000 பேருக்கு இலவச உணவுப் பொருட்கள்

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 1,000 பேருக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-04-17 17:59 GMT

வாணியம்பாடியில் அ.தி.மு.க. சார்பில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலக வளாகத்தில் சட்டமன்ற.உறுப்பினர் கோ.செந்தில்குமார் தலைமையில் இலவச உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் சதாசிவம், நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய, நலிவடைந்த இஸ்லாமியர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை 1,000 பேருக்கு முன்னாள் அணைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எம்.கோபால், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தசாமி உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகளிடம் புதியதாக உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார். இதில் கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்