இலவச கண் சிகிச்சை முகாம்

ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

Update: 2023-06-10 10:17 GMT

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையும், ஆரணி ஹோஸ்ட் அரிமா சங்கமும் இணைந்து ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள கார்நேசன் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது. 

சங்க தலைவர் டி.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் சம்பத், பொருளாளர் வி.சதீஷ், வருமாண்டு தலைவர் எஸ்.பி.சங்கர்ராம், மாவட்ட தலைவர் என்.சீனிவாசன், வட்டாரத் தலைவர் எல்.சுகுமார், இயக்குனர் ஏ.தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கண் பார்வை சம்பந்தமாக கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் நோய், ஒற்றைத் தலைவலி, கண்ணில் புரை நீக்குதல் சம்பந்தமாக 427 பேர் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டனர்.

அதில் கண்ணில் விழிலென்ஸ் பொருத்த 82 பேரை தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

முகாமில் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்