103 மாணவிகளுக்கு விலையில்லா கண் கண்ணாடி

தியாகதுருகம் அரசு பள்ளியில் 103 மாணவிகளுக்கு விலையில்லா கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

Update: 2023-04-18 18:45 GMT

தியாகதுருகம், ஏப்.19-:

தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் மாணவிகளுக்கு பார்வைத் திறன் குறித்து கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 103 மாணவிகளுக்கு பார்வைத் திறன் குறைபாடு கண்டறியப்பட்டது. அதன்படி நேற்று பார்வை திறன் குறைபாடு உள்ள மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சசி தலைமை தாங்கினார். வட்டார கண் மருத்துவ உதவியாளர் ஷகிலா, மருத்துவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 103 மாணவிகளுக்கு விலையில்லா கண் கண்ணாடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் கிருஷ்ணமாலா, செல்வபூரணி, உடற்கல்வி இயக்குனர் திலகா, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்