சிறை காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
வேலூர் சிறை காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வேலூர் மத்திய சிறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. சிறைத்துறை டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார். சிறை மருத்துவர் பிரகாஷ்அய்யப்பன் வாழ்த்தி பேசினார்.
முகாமில் ஏராளமானவர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.