இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடக்கிறது.

Update: 2023-03-11 19:11 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அரியலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உள்ளிட்டவை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாமிற்கு வரும், கண்புரை கண்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து, தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கண்களில் உள் விழிலென்ஸ் இலவசமாக பொருத்தப்பட உள்ளது. மேலும் பார்வை கோளாறு உள்ளிட்டவற்றுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. முகாமிற்கு வருபவர்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையுடன் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்