50 ஆயிரமாவது பயனாளிக்கு இலவச மின்இணைப்புக்கான ஆணையை வழங்கினார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின்இணைப்புக்கான ஆணையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 50,000 விவசாயிகளுக்கு அரசாணை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த நவம்பர் 11-ம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. தொடர்ந்து விவசாயிகளுக்கு படிப்படியாக ஆணை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின்இணைப்புக்கான ஆணையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.