130 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

130 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2022-10-13 19:35 GMT

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை தாங்கினார். கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு 130 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். மேலும் 2 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரை, எம்.எல்.ஏ. நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி, ஒன்றியக்குழு தலைவர் சுமதி தண்ணதாசன், பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், ஒன்றிய செயலாளர் நாசர், பேரூர் செயலாளர் கபிலன், பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், புஷ்பா, ஜாபர் அலி, பாலகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மைக்கேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்